தமிழ்நாடு தொழிற்காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்க மையம் அறிமுகம்! பெண் தொழில்முனைவில் பெண்கள் சந்திக்கும் சவால்களான கடன் பெறுதல் மற்றும் சந்தை வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, 20 மார்ச் 2023 நிதிநிலை அறிக்கையின் போது, மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள், பெண்களுக்காக மேம்படுத்தப்பட்ட பிரத்தியேகமான ‘புத்தொழில் இயக்கம்’ திட்டத்தை அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் அடிப்படையில், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், புதுமையான திட்டத்தின் கீழ், தமிழ்நாடு தொழிற்காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்க மையம் “TN-RISE” என்ற திட்டத்தை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறது. இந்த முயற்சியின் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள புதிய தொழில் முனைவோர் மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் தொழில்முனைவோர்களுக்கு ஒருங்கிணைந்த தொழில் ஆதரவுகள் வழங்கப்பட்டு அவர்களின் பகுதிகளில் தொழில் விரிவாக்கத்திற்கு வலிமையூட்டப்படும்.
தமிழ்நாடு தொழிற்காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்க மையம் (TN-RISE) வழியாக தொழில்முனைவோர் முக்கிய ஆதாயங்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற்று தொழில் உரிமையாளர்களுக்குள்ள சவால்களைக் கையாண்டு, அவர்களின் நிறுவனத்தில் செழிப்பான வளர்ச்சியைக் காண்பர். இந்த வியப்பூட்டும் முயற்சியில் தொடர்ந்து வரும் புது நிகழ்வுகளைக் காணத் தயாராயிருங்கள்!
தமிழ்நாடு தொழிற்காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்க மையம் (TN-RISE) இணை உருவாக்கல் மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. நல்ல இட வசதியுடன் உகந்த உள் கட்டமைப்பு மற்றும் தொழில் வல்லுநர்களைக் கொண்டு இத்திட்டம் செயல்படுகின்றது. இயக்கத்தின் செயல்பாடானது பெண் தொழில்முனைவோருக்கு நிதியுதவி, சந்தை இணைப்புகள், தொழில் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குகின்றது.
TN-RISE இயக்கத்தின் வழியாக தற்போதுள்ள தளங்களைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதனுடன் ஊரகப் பகுதிகளில் பெண்கள் நடத்தும் உயர்தர தொழில்களை அடைகாத்தல் சேவை வழியாக சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள இடைவெளிகள் நிவர்த்திச் செய்யப்படுகின்றன!
தமிழ்நாடு அரசின் பகுதி வாரியான சேவை வழங்கும் முகவராக செயல்பட்டு பெண்கள் நடத்தும் தொழில் நிறுவனங்களின் மேம்பாடு, ஊக்கத்தொகை வழங்கல், மானியம், வணிக நிலை உயர்வு மற்றும் பெண்கள் நடத்தும் நிறுவனம் என சான்றளிக்கும் வழிகாட்டுதல்கள் போன்றவற்றுக்கு ஆதரவளிப்பதாகும்.
தமிழ்நாட்டில் பெண்கள் தொழில் நிறுவன சூழல் அமைப்பை உருவாக்கவும், வளர்க்கவும் தொழில்துறை, பெரு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களை ஒன்றிணைத்தல்.
பெண்கள் நடத்தும் நிறுவனங்களைப் பாதுகாத்து எதிர்கால கட்டமைப்பிற்கான வசதிகளைப் வழங்கி, புதுமையான தொழில்நுட்ப ஆதரவுகளை வழங்கும் மாநில அரசு மற்றும் நடுவண் அரசு நிறுவனங்களுடன் கூட்டாண்மை உருவாக்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவுகள் மற்றும் மகளிர் தொழில் முனைவோரை நிலையாக செயல்படுத்த, மாநில அரசின் புதிய கொள்கைகள் மற்றும் ஏற்கனவே உள்ள கொள்கைகளை வலிமையூட்டுதல்.
நிறுவனத்துடன் தொடர்புடைய வணிக வசதி சேவைகளில் ஆர்வமுள்ள மற்றும் ஏற்கனவே உள்ள அனைத்து பெண் தொழில்முனைவோருக்கும் ஆதரவு வழங்குதல்
சேவை வழங்குநர்கள் மற்றும் பசுமை நிறுவன வளர்ச்சிக்கு உதவும் கூட்டாண்மையாளர்களுடன் இணைத்தல்
தொழில் வளர்ச்சி மேம்பாட்டுக்கு உதவுதல்
தொழில் வளர்ச்சிக்கான சந்தை இணைப்புகளைப் பெற உதவுதல்
புதிய பொருள் மேம்பாட்டுக்கு உதவுதல்
வழங்கல் சங்கலி சவால்கள், கட்டுமான அமைப்பு மற்றும் செயல்முறைகளை புரிந்துகொள்ளுதல்
அரசு நலத்திட்டங்களுடன் செயல்படுத்தச் செய்தல்
நிதியுதவி மற்றும் கடன் இணைப்பு வழங்கல்
Malesuada fames ac turpis egestas integer eget aliquet nibh.
msalesuada fames ac turpis egestas integer eget aliquet nibh. Egestas maecenas pharetra.
Optometrist Specialist
Malesuada fames ac turpis egestas integer eget aliquet nibh.
msalesuada fames ac turpis egestas integer eget aliquet nibh. Egestas maecenas pharetra.
“I get all my prescriptions through this app. now I never have to waste my time going to a doctors office and sitting around the waiting room!”
Theo James
“I love my dermatologist that I found on this app! She is very professional and it’s so easy to just chat or video call her whenever I need something!”
Emilia Munro
“I downloaded this app when i was super sick and had a doctor write me a prescription within 15 minutes!! What a life-changing app!”
Branden Griffiths