தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் (TNRTP), வாழ்ந்து காட்டுவோம் திட்டமாக அறியப்பட்டது, தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் தொழில்களை புதிய வடிவில் புத்தாக்கம் செய்யும் இலட்சியத்துடன் செயல்படும் திட்டமாகும். உலக வங்கியின் ஆதரவுடன் செயல்படும் இத்திட்டம் வறுமை ஒழிப்பையும் தாண்டி வளத்தை உருவாக்குவதாகும். இத்திட்டம் கீழ்காணும் கூறுகளுடன் ஊரகப் பகுதி சமூகங்களுக்கு நிலையான வளத்தை உருவாக்கி வருகின்றது.
- ஊரகத் தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல்: இத்திட்டம் ஊரகப்பகுதிகளின் தொழில்களை உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும், பெண் தொழில்முனைவோருக்கு பொருளாதார சுதந்திரம் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்குமான பாதையை வழங்குகிறது.
- நிதி வழங்கலை மேம்படுத்துதல்: வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரகப் பகுதி சமூகங்கள் தங்கள் தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய நிதியுதவிப் பெறுவதை உறுதிச் செய்கின்றது. இதில் குறுந்தொழில்கள், சேமிப்புத் திட்டங்கள் மற்றும் பிற நிதித் திட்டங்கள் உள்ளடங்கும்.
- வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்: இந்த திட்டம், தனிநபர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு திறன் மற்றும் வளங்களை வழங்கி, ஊரகப்பகுதிகளில் உள்ள வேலையின்மை சவாலை நிவர்த்தி செய்கின்றது.
தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில், 120 வட்டாரங்களில், 3994 கிராம ஊராட்சிகளில் செயல்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், TNEPRP, TNSRLM, மற்றும் NRLP திட்டங்களின் பலத்தை பயன்படுத்தி வருகின்றது. இந்த கூட்டு திட்டங்களில் ஒருங்கிணைந்த அணுகலின் மூலம் ஊரகப் பகுதிகளில் வியப்பூட்டும் புத்தாக்கங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இணையதளத்தைப் பாருங்கள்